Thursday 3 December 2015

வெள்ள சேத பாதிப்புகளை பார்வையிட்டார் பிரதமர் நரேந்திர மோடி

தமிழகத்தில் கடந்த நூறு ஆண்டுகளில் பெய்யாத அளவுக்கு கன மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ள சேத பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார்.

அவருடன் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சென்றுள்ளார். ஹெலிகாப்டர் மூலமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளை மோடி நேரடையாக பார்வையிட்டு சேதங்கள் குறித்து கேட்டறிந்தார்.
அதற்கு முன்னர் அடையாறு விமான தளத்தில் முதல்வர் ஜெயலலிதாவை அவர் சந்தித்து வெள்ளச் சேதங்கள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, தமிழகத்துக்கு உடனடியாக ரூ.1000 கோடி நிவாரண நிதி ஒதுக்கப்படுவதாக மோடி அறிவித்தார்.
முன்னதாக சென்னை விமான நிலையம் குளம் போல காட்சி அளிப்பதால், புது தில்லியில் இருந்து தனி விமானத்தில் தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, அரக்கோணத்தில் உள்ள ராஜாளி விமான தளத்தில் வந்திறங்கினார்.
அவரை, தமிழக உயர் அதிகாரிகளும், காவல்துறை உயர் அதிகாரிகளும் வரவேற்றனர்.
அரக்கோணத்துக்கு தனி விமானம் மூலம் வந்த மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக அடையாறு வந்தார்.



ஹைதராபாத்தில் இருந்து அரக்கோணத்துக்கு சிறப்பு விமானம்: ஏர் இந்தியா இயக்கம்

ஹைதராபாத்தில் இருந்து அரக்கோணத்துக்கு சிறப்பு விமானம்: ஏர் இந்தியா இயக்கம்:


சென்னை விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணிகளின் வசதிக்காக அரக்கோணம் ராஜாளி விமான தளத்துக்கு ஹைதராபாத்தில் இருந்து சிறப்பு விமானத்தை இயக்குகிறது ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம்.
சென்னை விமான நிலையம் மூடப்பட்டதால் அங்கிருக்கும் பயணிகள் சிறப்பு ஹெலிகாப்டர்கள் மூலம் அரக்கோணம் கொண்டு செல்லப்பட்டு, அவர்கள் சிறப்பு விமானம் மூலம் ஹைதராபாத் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதே போல, சென்னை விமான நிலையம் வர வேண்டிய 30 பேரை ஏர் இந்தியா விமானம் அரக்கோணத்துக்கு அழைத்து வந்துள்ளது. தற்போது சென்னை விமான நிலையத்தில் இருந்த 130 பயணிகளை ஹைதராபாத் அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தனி விமானம் மூலம் அரக்கோணம் வந்து சேர்ந்தார் பிரதமர் மோடி

தனி விமானம் மூலம் அரக்கோணம் வந்து சேர்ந்தார் பிரதமர் மோடி:


சென்னை விமான நிலையம் குளம் போல காட்சி அளிப்பதால், புது தில்லியில் இருந்து தனி விமானத்தில் தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, அரக்கோணத்தில் உள்ள ராஜாளி விமான தளத்தில் வந்திறங்கினார்.
அவரை, தமிழக உயர் அதிகாரிகளும், காவல்துறை உயர் அதிகாரிகளும் வரவேற்றனர்.
நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு கன மழையால் சின்னாபின்னமாகியுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் பார்வையிடுகிறார்.
அரக்கோணத்துக்கு தனி விமானம் மூலம் வந்த மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக அடையாறு வந்து, அங்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஹெலிகாப்டரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட உள்ளார்.
சில மணி நேரங்களுக்கு முன்புதான் ஹெலிகாப்டர் மூலம் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுமார் ஒன்றரை மணி நேரம் பறந்தபடி பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



சென்னை வெள்ளம்: தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சார்பில் 2400 பேர் மீட்பு

8117-2', 'auto'); ga('send', 'pageview');

சென்னை வெள்ளம்: தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சார்பில் 2400 பேர் மீட்பு




சென்னை வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சார்பில் இதுவரை 2400 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணியை தீவிரப்படுத்தும் வகையில் மேலும் 600 பேர் சென்னை வருகினறனர்.
சென்னை மழை வெள்ளம் குறித்த, நெருக்கடி கால மேலாண்மை குழுக் கூட்டம் இன்று புதுதில்லியில் நடைபெற்றது. மத்திய உள்துறை செயலர் ராஜீவ் மெகரிஷி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாதுகாப்பு, உணவு, ரயில்வே, வேளாண்மை, சுகாதாரம், தொலைதொடர்பு துறை அமைச்சக அதிகாரிகள்,  தேசிய பேரிடர் மேலாண்மை குழு உறுப்பினர்கள், வானிலை மைய அதிகாரிகள், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பங்கேற்றனர்.
தேசிய பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த 30 குழுக்கள் சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள தென் சென்னை பகுதியில் தீவிர கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக, இக்கூட்டத்தில் பங்கேற்ற தேசிய பேரிடர் மீட்பு குழு (என்.டி.ஆர்.எப்.) தலைவர் ஒ.பி. சிங் கூறினார்.
மீட்பு பணியை தீவிரப்படுத்தும் வகையில் மேலும் இரண்டு ராணுவ குழுக்களை அனுப்புவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஒரு ராணுவ குழுவில் 75 வீரர்கள் இடம் பெறுவர்.
என்.டி.ஆர்.எப். சார்பில் இதுவரை 2,400 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், தற்போது பணியில் ஈடுபட்டுள்ள 600 பேர் தவிர மேலும், 600 பேரை சென்னைக்கு அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டது.






மழையால் நான்காவது நாளாக புதுவையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்.

மழையால் நான்காவது நாளாக புதுவையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்.


தொடர் மழையால் புதுச்சேரியில் நான்காவது நாளாக வியாழக்கிழமையும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் புதுவையில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
முக்கிய சந்திப்புகளான இந்திராகாந்தி சிலை, சிவாஜி சிலை ஆகிய பகுதிகளில் மழைவெள்ளம் இடுப்பு அளவிற்கு தேங்கியது.
இதனால் அந்த சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல வெங்கட்டா நகர், கிருஷ்ணாநகர், ரெயின்போ நகர், பாவாணர் நகர், பூமியான்பேட் உள்ளிட்ட நகர பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்தால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
இந்நிலையில் இரவு முழுவதும் மழை பெய்யவில்லை. இதனால் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியிருந்த வெள்ளம் மெதுவாக வடிய தொடங்கியது.
ஆனாலும் இந்திராகாந்தி சிலை பகுதியில் தேங்கியிருந்த நீர் வெளியேறவில்லை. தொடர்ந்து 2 அடிக்கு மேல் மழைநீர் தேங்கிக்கிடக்கிறது. இதனால் வாகனங்கள் வெள்ளத்தில் மிதந்து சென்றன. பாவாணர்  நகர், பூமியான்பேட்டை, நடேசன் நகர் பகுதிகளிலும் மழைநீர் வெளியேறவில்லை.
சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் மக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர்.


Emergency Help Lines Numbers


Chief Minister Jayalalithaa said services of police, fire and rescue, national and state disaster relief forces and Coast Guard are ready to tackle the situation.
CHENNAI:  Chennai Corporation has announced emergency contact numbers for all the regional zones in the city. People can contact the following numbers in case of any emergency due to the floods.
  • Tree fall, waterlogging - 1913
  • Sewage overflow - 45674567, 22200335
  • State Emergency - 1070
  • District Emergency - 1077
  • Electricity - 1912
  • Fire & Rescue -101
Other office numbers:
  • 1st Regional Office (Tiruvottiyur) - 9445190001
  • 2nd Regional Office(Manali) - 9445190002
  • 3rd Regional Office (Madhavaram) - 9445190003
  • 4th Regional Office(Tondiarpet) - 9445190004
  • 5th Regional Office(Royapuram)- 9445190005
  • 6th Regional Office(Thiru. Vi. Ka. Nagar) - 9445190006
  • 7th Regional Office(Ambattur) - 9445190007
  • 8th Regional Office(Annanagar) - 9445190008
  • 9th Regional Office(Teynampet) - 9445190009
  • 10th Regional Office(Kodambakkam) - 9445190010
  • 11th Regional Office (Valasaravakkam)- 9445190011
  • 12th Regional Office(Alandur) - 9445190012
  • 13th Regional Office (Adyar)- 9445190013
  • 14th Regional Office(Perungudi) - 9445190014
  • 15th Regional Office(Sholinganallur) - 9445190015